Disable text selection

November 15, 2011

இன்று பெண்ணியம் போகும் பாதை - ஒரு அலசல்

நான் ஆண்களை விமர்சிக்காமல் குறிப்பாக பெண்களை விமர்சிக்க தக்க காரணம் உண்டு;

ஒரு ஆண் அடாவடி செய்தால் அவனைத்தட்டிக்கேட்க சமூகம் உண்டு; போதாக்குறைக்கு இன்று மாதர் சங்கங்களும் அமைப்புகளும், ஒருதலைபட்சமான சட்டங்களும் அவன் மேல் பாய காத்துக்கொண்டிருக்கின்றன;

இன்று பெண்ணியம் போகும் பாதை ஆபத்தானது; அநியாயமாக ஒரு பெண்ணுக்கு அநீதியோ கொடுமையோ செய்யப்படும் பக்ஷத்தில் அதை பெண்ணிய அமைப்புகள் (சமூகமும் தான்) தண்டிப்பதும் கண்டிப்பதும் நியாயமே;

ஆனால், அதையும் தாண்டி அவள் ஒரு பெண் என்பதாலேயே அவள் செய்யும் எதையும் நியாயப்படுத்த முனைவது அக்க்ரமம்;

அதற்கும் மேலாக, அடாவடி செய்யும் பெண், அதைத்தட்டிக்கேட்கும் ஆணை ஒருதலைப்பட்சமான சட்டங்களால் அடக்குமுறைக்கும் அநியாயத்துக்கும் ஆளாக்குவது அக்மார்க் அயோக்கியத்தனம்;

இப்படி இன்று வளர்ந்துவிட்டதாக, சுதந்திரமடைந்து விட்டதாக நினைக்கும் சில பல நவநாகரீக புதுமைப்பெண்கள் பண்ணும் அட்டூழியங்களால் பல ஆண்கள் பாதிக்கப்படுவதால், நான் இன்றைய சூழ்நிலையில் பெண்களையே சாட வேண்டியதாயிருக்கிறது;

பெண் என்பதும் ஆண் என்பதும், உடற்கூறாலும், சமூக கடமையாலும் மாறுபட்ட நமக்கு கிட்டிய அடையாளங்களே; நாம் சமம், ஆனால் வேறுபட்டவர்கள்; பெண் என்பதாலேயே அவள் செய்வது சரி என்பதில்லை, பெண்ணியப் புலிகளே!

இங்கே நின்று, ஒரு reality check செய்து கொள்ளலாம்......

நானா நீயா என்று போட்டி போடுபவரா நீங்கள்? துணையை அதிகாரம் செய்து ஆக்ரமிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவேனும் உடையவரா நீங்கள்? விடை ஆம் என்றால், நீங்கள் இதற்கு மேல் படிக்க வேண்டியதில்லை, தோழியே/நண்பரே! கடிய சொல் தான்.... மன்னிக்கவும்..... அனால் அது உண்மை...... இல்லை என்றால், மேலே படியுங்கள்.....

தன் தேவைகளை மதித்து, தன்னை கௌரவமாக, அன்போடு, அஹங்காரமின்றி, அனுசரணையோடு பாசமாக நடத்தும் துணையை எந்த மனைவியும், எந்தக்கணவனும் நேசித்து தோள் கொடுப்பர்;

அது அதிகாரத்தினாலோ சட்டப்புத்தகத்தாலோ, கூச்சலிடும் சங்க அமைப்பாலோ நடக்காது....... அன்பாலும், புரிதலாலும், மெல்லிய உணர்வுகளை மதித்தலாலும், பகிர்தலாலும், விட்டுக்கொடுப்பதிலும், தியாகத்திலும்  மட்டுமே நடக்கும்........

மரியாதை மானக்கேடல்ல!

கணவனுக்கு மனைவி மரியாதை தருவது என்பது அடிமைத்தனம் அன்று; அப்படி நினைப்பது மடமையும், தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுமே ஆகும்;நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது தம்பதிகளில் ஆண் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன்; மனைவி அவனை விட அறிவாளியாகவே இருந்தாலும், அவனுடைய வயதுக்கும், அவனுடைய கணவன் என்ற ஸ்தானத்துக்கும், அனுபவத்துக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை தருவதே பண்புடைய செயல்;

தான் அதிகம் சம்பாதித்தாலும், அவனை விட உயர்ந்த பதவியில் இருந்தாலும், யாருக்காக இதை எல்லாம் செய்கிறோம் என்று யோசித்துப்பார்த்தால் எடுத்தெறிந்தோ மரியாதைக்குறைவாகவோ நடக்கத்தோன்றாது;கணவனை விட மேம்பட்ட மனைவி (சம்பாத்தியதிலோ, படிப்பிலோ, பதவியிலோ..... எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்....), தன்னை விட மூத்தவனான தன் கணவனுக்கு மரியாதைக்குறைவின்றி அன்பாக, அனுசரணையாக, ஆதுரத்துடன் நடந்து கொண்டால், ஆஹா, தன் மனைவி தன்னை விட மேம்பட்டவளாக இருந்தாலும், தன்னை இவ்வளவு மதிப்பாக, கௌரவமாக நடத்துகிறாளே என்று கணவனும் பூரித்து, அவளை உச்சத்துக்கு ஏற்றப்பாடுபடுவான்......

இந்த உளவியல் கூட புரியாமல், இன்று பல பெண்கள் ஏதோ ஒரு சில வகையில் தன் கணவனை விட மேம்பட்டவர்களானதால் அவனை சற்றும் மதியாமல் நடப்பதும், பலர் அறிய அலக்ஷ்யப்படுத்துவதும், அவன் பண்ணும் உதவியையும் குலைத்து விடும்....... "அட சீ, இப்பவே இவ்ளோ ஆட்டம் போடறா, நாம இன்னும் உதவி மேல தூக்கி நிறுத்தினா இன்னும் என்ன பண்ணுவாளோ" என்று தான் நினைப்பார்கள்.... யாராக இருந்தாலும்........ கணவன் என்றில்லை, எந்த உறவாக இருந்தாலும்........இன்று, பெண்ணியம் பெண்ணியம் என்று பறக்கும் புதுமைப் பெண்களுக்கு இது புரிவதில்லை; மரியாதைக்குறைவாக நடப்பது விடுதலையின் வெளிப்பாடு அன்று......அது மடமையின் வெளிப்பாடு...... அறியாமையின் அறிகுறி........ ஆபத்தான ஆரம்பம்...... அவ்வளவே!

இது குடும்பத்தில் தான் என்றில்லை....... கணவன் என்று நான் பேசவில்லை.... ஏன் ஆணுக்கு என்று கூட வாதமிடவில்லை... யாராகதான் இருந்துவிட்டுப்போகட்டுமே.......... இன்னொரு உயிரை மரியாதைக்குறைவாக நடத்துவதும், அதிலும் குறிப்பாக நம்மைச்சார்ந்தவரை அவர் உணர்வு புரியாமல், புரிந்து கொள்ள விரும்பாமல் தன்னை முன்னிறுத்தி வினையாற்றும் சுயநலமும் பண்புகெட்ட செயல். அக்மார்க் அயோக்யத்தனம்!

இங்கு பெண்களை முன்னிட்டு கணவனுக்கு மரியாதை தராமல் நடப்பது தப்பு என்று எழுதுவதால், பெண்ணியப்பெண்கள் பாய வேண்டாம்......கணவன்மார்களை நான் 'தண்ணி தெளித்து' விட்டு விட்டதாக என்ன வேண்டாம்; தனது தூய துணைவியை காரணமில்லாமல் அவமானப்படுத்தும் கணவனும் அஹங்காரத்தின், தாழ்வு மனப்பான்மையின் சின்னம். பெண்ணிய முழக்கம் ஆபத்தான அலைவரிசைகளை இன்று ஒளிபரப்புவதால் இப்படி எழுத வேண்டியதாயிற்று.......

The bottom line is, ஆணோ பெண்ணோ - தன்னோடு வாழக்கையை பங்கு போட்டுக்கொண்ட துணையை மரியாதைக்குறைவாக, உணர்வுகளை உள்வாங்கிப்புரியாமல், inconsiderate ஆக, பண்பற்ற முறையில் நடத்தினால் அது மனமுதிர்ச்சியற்ற இருவரின் சேர்க்கையையே காட்டுகிறது....... அது இல்லறமே அல்ல.... நல்லறமோ அல்லவே அல்ல. உடலால் வளர்ந்தாலும் மனதால் வளராத இரு குழந்தைகள் ஆடும் அம்மா அப்பா விளையாட்டு....... அவ்வளவே............

கணவன் மனைவி உறவு ஆண்டான் அடிமை உறவு அன்று...... அது தோழமை...... நட்பு....... சொல்கிறவன் நானல்ல........ இதை முன்மொழிந்தது வேதம்........ "சகீ" (தோழியே) என வாய்நிறைய விளித்து மனம் நிறைய பிணைத்தது மனைவியை....... இதை வழிமொழிந்தவன் ஒரு கிழவன்....... தமிழ் வேதம் செய்த வள்ளுவன்........ "மடந்தையோடும் எம்மிடை நட்பு" என முழங்கினான்.......

எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறோம், மக்களே? கல்யாணமான பின், அதிகபக்ஷம் எழுபது ஆண்டுகளா? நட்பு முறை பூண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏன் இந்த  இந்த ஒன்றுக்கும் உதவாத ஈகோ, அஹங்காரம், மமதை, பண-திமிர், பதவி, போட்டி? அதுவும் உயிருக்குயிரான உறவில் என்ன இந்த அல்பத்தனம்?

ஒருவரை ஒருவர் அறிவோம்...... அறிந்து விரிவோம்............ இல்லறம் புரிவோம்...... வாழ்வோம்....... வாழத்தானே மணம்  செய்தோம்??? இங்கு என்ன ஈகோ? இருவரும் மனம் திறப்போம்......... தினம் சிறப்போம்........

May 22, 2011

Held back.....

Mysterious midnight phone calls and his whispered conversations in the verandah;

Increasing regularity of his irregular dinners at home; a dilute whiff from him of a perfume I do not use;

The confirmation by sight at last, that my exclusive privilege was erstwhile;

A mute witness I stand to all this;

What holds me back? The one that gave me birth but no school, and the one I gave birth to that goes to school.

May 6, 2011

பய பக்தி!

ஒருநாள் பாம்பைப்பார்த்துப்பயந்து கம்பெடுத்தவன் மறுநாள் மனைவியுடன் நாகராஜனுக்குப்பால் ஊற்றுகிறானே! இது தான் பய பக்தியா?

April 25, 2011

மனைவி

"நாளெல்லாம் நின்னு வீட்ல வேல செஞ்சியா? கால் வலிக்கறதா? நான் வேணா பிடிச்சு விடவா?". நீ கால் பிடிக்க வேண்டாம்.. அந்த வார்த்தை ஒன்றே போதும், உன் மனைவி உன்னை ஆசீர்வதிக்க....... உனக்காக பரப்ரஹ்மம் பரம கருணையோடு தாங்கிய பெண் ரூபம் மனைவி..... நட்பே, புரிந்து கொள்.. உன் தாயின் ஆசி எத்தனை முக்கியமோ அதற்கு எள்ளின் முனையில் பதினாறில் ஒரு பங்களவும் குறைந்ததன்று, உன் மனைவின் உள்ளம் குளிர்ந்த ஆசி... அது ஆசியாக இல்லாவிடில் உனக்கான பிரார்த்தனையாக அமையும்.

January 27, 2011

அன்பு அழிந்த தருணம்.....

வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பார்கள்.......  கை பட்டதா, கால் பட்டதா என்பது இல்லை இங்கு விஷயம்..... அவள் வேண்டாத பெண்டாட்டி..... அது விஷயம்..... அவள் என்ன செய்தாலும் குற்றமாகத்திரிக்கப்படும்!