Disable text selection

November 15, 2011

இன்று பெண்ணியம் போகும் பாதை - ஒரு அலசல்

நான் ஆண்களை விமர்சிக்காமல் குறிப்பாக பெண்களை விமர்சிக்க தக்க காரணம் உண்டு;

ஒரு ஆண் அடாவடி செய்தால் அவனைத்தட்டிக்கேட்க சமூகம் உண்டு; போதாக்குறைக்கு இன்று மாதர் சங்கங்களும் அமைப்புகளும், ஒருதலைபட்சமான சட்டங்களும் அவன் மேல் பாய காத்துக்கொண்டிருக்கின்றன;

இன்று பெண்ணியம் போகும் பாதை ஆபத்தானது; அநியாயமாக ஒரு பெண்ணுக்கு அநீதியோ கொடுமையோ செய்யப்படும் பக்ஷத்தில் அதை பெண்ணிய அமைப்புகள் (சமூகமும் தான்) தண்டிப்பதும் கண்டிப்பதும் நியாயமே;

ஆனால், அதையும் தாண்டி அவள் ஒரு பெண் என்பதாலேயே அவள் செய்யும் எதையும் நியாயப்படுத்த முனைவது அக்க்ரமம்;

அதற்கும் மேலாக, அடாவடி செய்யும் பெண், அதைத்தட்டிக்கேட்கும் ஆணை ஒருதலைப்பட்சமான சட்டங்களால் அடக்குமுறைக்கும் அநியாயத்துக்கும் ஆளாக்குவது அக்மார்க் அயோக்கியத்தனம்;

இப்படி இன்று வளர்ந்துவிட்டதாக, சுதந்திரமடைந்து விட்டதாக நினைக்கும் சில பல நவநாகரீக புதுமைப்பெண்கள் பண்ணும் அட்டூழியங்களால் பல ஆண்கள் பாதிக்கப்படுவதால், நான் இன்றைய சூழ்நிலையில் பெண்களையே சாட வேண்டியதாயிருக்கிறது;

பெண் என்பதும் ஆண் என்பதும், உடற்கூறாலும், சமூக கடமையாலும் மாறுபட்ட நமக்கு கிட்டிய அடையாளங்களே; நாம் சமம், ஆனால் வேறுபட்டவர்கள்; பெண் என்பதாலேயே அவள் செய்வது சரி என்பதில்லை, பெண்ணியப் புலிகளே!

இங்கே நின்று, ஒரு reality check செய்து கொள்ளலாம்......

நானா நீயா என்று போட்டி போடுபவரா நீங்கள்? துணையை அதிகாரம் செய்து ஆக்ரமிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவேனும் உடையவரா நீங்கள்? விடை ஆம் என்றால், நீங்கள் இதற்கு மேல் படிக்க வேண்டியதில்லை, தோழியே/நண்பரே! கடிய சொல் தான்.... மன்னிக்கவும்..... அனால் அது உண்மை...... இல்லை என்றால், மேலே படியுங்கள்.....

தன் தேவைகளை மதித்து, தன்னை கௌரவமாக, அன்போடு, அஹங்காரமின்றி, அனுசரணையோடு பாசமாக நடத்தும் துணையை எந்த மனைவியும், எந்தக்கணவனும் நேசித்து தோள் கொடுப்பர்;

அது அதிகாரத்தினாலோ சட்டப்புத்தகத்தாலோ, கூச்சலிடும் சங்க அமைப்பாலோ நடக்காது....... அன்பாலும், புரிதலாலும், மெல்லிய உணர்வுகளை மதித்தலாலும், பகிர்தலாலும், விட்டுக்கொடுப்பதிலும், தியாகத்திலும்  மட்டுமே நடக்கும்........

5 comments:

sowmya said...

Hmm..Ennangal than oruvarai prathibalikkum ullum veliuum..

Nice one

bdharmal said...

nandri :)
unmai.... thangal karuthai vilakkumaaru vendugiraen.....

Nisar said...

Miga unmaiyaga menmai ku than mudal idam endra ungal karthuk ku vaalthugiran

Unknown said...

நண்பரே, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. எங்கள் வீட்டில் நாங்கள் இருவரும் சமம். யாரும் யாரையும் அடக்கி ஆளுதல் கிடையாது. அன்பு, அன்பு மட்டுமே எங்கள் மொழி. விட்டுக்கொடுத்தலும், புரிதலுமே எங்கள் வாழ்கை ஓடும் தண்டவாளங்கள். உங்கள் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

Unknown said...

நண்பரே, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. எங்கள் வீட்டில் நாங்கள் இருவரும் சமம். யாரும் யாரையும் அடக்கி ஆளுதல் கிடையாது. அன்பு, அன்பு மட்டுமே எங்கள் மொழி. விட்டுக்கொடுத்தலும், புரிதலுமே எங்கள் வாழ்கை ஓடும் தண்டவாளங்கள். உங்கள் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.