பொன்மாளிகை வேண்டும், அங்கு
வெண்மதி சூழ்ந்திடும் வேளையிலே ஒரு
தண்ணிழல் முற்றமும் தென்றலுடன் என்
பண்ணிசை யாழ்மிசை பண்ணிடவே ஒரு
கன்னியவள் வேண்டும்;
கண்ணுக் கழ கழகாய், ஒரு
கன்றுடன் கறவைபுல் மென்றிட வேண்டும்
அன்றைய சோறுநிதம் மிம் மண்ணில்
சென்று தேடாமல் ஒன்றிட வேண்டும்
குன்றா மதி வேண்டும்;
கற்றவர் உடன்வேண்டும், மற்று
செற்றவள் சொந்தமும் வாணியுடன் நற்
கொற்றவை கூட்டணியும் - சற்று
பெற்று மகிழ்ந்திட அருள் வேண்டும்
நற்றவ மிக வேண்டும்;
எத்தனை இடர் வரினும் - அவை
அத்தனையும் யான் சுட்டிடவே - நல்
புத்தி உடன் வேண்டும்; என்னைக்
கட்டியணைத்திடு மன்னை நிகர்த் தொரு
பத்தினிப் பெண் வேண்டும்......
2 comments:
Can see the inspiration from Bharathiyaar songs.. Truly inspiring!!!
:)
Yes, bhaarathi is indeed by hero...... I may not agree with some of his thoughts, but still, I love his poetic style!
Post a Comment