A sense of homecoming என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அதைப் போல உள்ளது.
நேற்று எனது 40வது பிறந்த நாள்.
ஒரு பக்கம், நமக்கு வயதாகிறது என்னும் நினைப்பு இருந்தாலும் மறுபக்கம், எனது நெருங்கிய பள்ளி, கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஏற்கெனவே 40களில் இருப்பதால், "நான் வந்துட்டேன்" என்னும் ஒரு ஆழ்மனக்குரலே ஒலிக்கிறது.
I was never ready to be 40, என்றே சொல்ல வேண்டும். மனதளவில் எப்போதும் சிறு குழந்தையாகவே இருக்க விழைந்துள்ள எனக்கு, 40 என்னும் போது, அது ஒரு நகைமுரணாகத் தென்படுகின்றது.
40 is the new 20 என்று எனது நண்பர்கள் கூறுகிறார்கள்.
அதையே நம்புவோம்.
அன்புடன்,
BD
No comments:
Post a Comment