சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று
செம்மாந்து வருமாப்போல் வந்தாய்;
செந்திருவன்னாயுன் சோதி முகங்கண்டு
சிந்தை திறை கொடுத்தேன்;
நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்
வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;
அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் - என்றும்
தேயாத திலகமிட்ட திங்களடி நீ.
நினைக்கின்றேன் உன்னை நான், என்
நினைவினில் வாழ்கின்றாய் நீ;
பனிக்காலப் போர்வை போலும்
இனிக்கின்ற இதம் நீ என்னில்;
No comments:
Post a Comment