இரவின் இருளில் நிலவு துணை எனக்கு
அமாவாசை அதுவும் இல்லை;
குளிருக்கு கதகதப்பு
கம்பளி கொடுத்தால் உண்டு;
மாதம் முப்பது நாள், மூன்று நாள் மட்டும்
மல்லிகை மணம் இல்லை மாதரார்க்கு;
எனக்கென்னவோ மூன்றும் முப்பதும் ஒன்றுதான்....
வித்தியாசம் சைபர் தானே.......
வாயும் வயிறுமாய் வாழ்ந்திருக்க வந்தவளை
வாய்க்கும் வயிற்றுக்கும் அலைப்புண்டுழல விட்டாய்;
கற்பழித்தாய், கொலை செய்தாய்,
ஆயுள் கைதியாகி சிறை சென்றாய்......
ஒரு பெண்ணின் வாழ்வை (மட்டும்) நீ கெடுத்தாய்
என சட்டம் சொல்லும்.....
உண்மை அதுவா? உனக்கே புரியும்.....
ஒரே ஒருத்தியின் வாழ்வை மட்டுமா நீயழித்தாய்?
செய்யாத தவறுக்கு சிறை சென்ற பெண்ணிங்கே
சீதை மட்டும் தானா?
கற்பழித்தாய், கொலை செய்தாய்,
ஆயுள் கைதியாகி சிறை சென்றாய்......
தாலி விலங்காக, தனிமை சிறையாக
நானும் ஆனேன் ஆயுள் கைதி......
உன்னால்..........
2 comments:
arumaiyana kavithai...
நன்றி, ஷாலினி!
Post a Comment