வகுப்பறை மூலம் எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் மற்றும் ஆற்றல் மிக்க கவிஞர் திரு. தனுசு அவர்கள்.
அவரது கவிதையை இங்கு குறிஞ்சித்திணையில் ஞாயிறு மலராக வெளியிடுவதில் உவகை அடைகிறேன்.
இனி மேடை, நண்பர் தனுசு வசம்!
_____
தூரப்போய்விடும் நிலவு!
இன்று ஒரு கவிதை எழுத வேண்டும்
எதைப்பற்றி எழுதலாம்?
"வழக்கம்போல்
என்னைப்பற்றியே எழுதிவிடு"
நிலா சொன்னாள்!
குளத்து நீரின்
அசையும் அலையில்
தெரியும் உன் முகம்
என்னை முத்தம் இட அழைக்கும்.
நானும்
நித்தம் ஒரு முத்தம் தருவேன்-ஆனால்
நேற்று வந்தேன்
நீ
கானவில்லை
எங்கே சென்றாய்?
சென்ற மாதமும்
ஒருமுறை
நீ
வரவில்லை
எங்கே சென்றாய்?
வானுலக நாகம் போல்
ஊர்ந்துக்கொன்டே இருக்கும் நீ
மாதம் ஒரு முறை
தோலுரிக்க போய்விடுகிறாயா?
இந்திர லோக
சுந்தரிகளோடு
நீ தினம் தினம் நடத்தும்
அழகிப்போட்டியால்
அசந்து
ஓய்வெடுக்கப் போய்விடுகிறாயா?
பதில் சொன்னாள்
நானும் பெண்தானே
அதனால்
மாதம் ஒருமுறை..........
தூரப்போய்விடுவேன் உனை விட்டு.
-தனுசு
2 comments:
நன்றிகள் நண்பரே, எனது கவிதை வெளியானதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்,
உங்கள் சொல்லாட்சி வியக்கத்தக்க அழகுடன் உள்ளது.,
//இந்திர லோக சுந்தரிகளோடு// - அழகு!
//வானுலக நாகம் போல்// - என்ன கற்பனை! சான்சே இல்ல!
கட்டாயம் நீங்கள் கவி உலகில் ஒரு சிகரத்தை தொடுவீர்கள் என சொல்லலாம். வாழ்த்துக்கள்.
Post a Comment