ஒருத்தனை அவன் இந்த உடலை நீத்த பின் மண்ணில் இட்டு புதைக்கிறார்கள். இன்னொருத்தனை எரிக்கிறார்கள். கேட்டால் கலியாணம் பண்ணி வாழாதவனை புதைக்கிறோம் விவாஹம் ஆகி வாழ்ந்தவனை எரிக்கிறோம் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன? பாமரத்தனமாக தெரிந்தாலும். இதற்கு ஆதாரம் வேத மதம் தான். அவர்களுக்கு தெரிவதில்லை. சாரத்தை விட்டு விட்டு சம்பிரதாயத்தை மட்டும் பிடித்து கொண்டுள்ளார்கள். கொஞ்சம் பார்ப்போம்.
பிரம்மச்சாரிக்கு அக்னி கார்யம் இல்லை. க்ருஹஸ்தனுக்கு உண்டு. வானப்ரஸ்தனுக்கு உண்டு. சன்யாசிக்கு இல்லை. ஏனெனில் அவன் தான் சன்யாசம் வாங்கும் போது அக்னியை தீர்த்தத்திலே விட்டு விடுகிறானே. நேரே பிரம்மச்சர்யத்தில் இருந்து சன்யாசம் என்றால் அந்த ஸ்பெஷல் கேசுக்கு அதுவும் இல்லை.
விவாக காலத்திலே தானே வளர்த்த அந்த பவித்ரமான அக்னியை ரக்ஷிக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே நெல்லை கைகுத்தல் அரிசியாக்கி அந்த உமியை வேத முறைப்படி இட்டு அணையாமல் ரக்ஷிக்க வேண்டும். இந்த கடமை பத்னிக்கு. அதனால் தான் அவளை வீட்டிலேயே வைத்து. பெண்களுக்கு வேத கர்மாக்களில் பங்கில்லை என யார் சொன்னது? வேண்டுமென்றே தவறாக சொன்னது. பத்னி இல்லாமல் யாரும் யாகமோ அக்னி ஹோத்ரமோ பண்ண இயலாது. இப்போது இவளும் வேலைக்கு போகிறேன் என்று பறக்கிறாள். யார் அக்னியை ரக்ஷிப்பது? யோசிப்போமா?
சன்யாசம் ஏற்காமல் ஒருத்தன் ஜன்மா முடிந்தால், அவன் பண்ணுகிற கடைசி ஆகுதியாக அவனுடைய தேகத்தை அந்த அக்னியில் தான் எரிக்க வேண்டும். எந்த அக்னியை விவாகம் முதல் ஆயுஸ் பர்யந்தம் அவன் ரக்ஷித்தானோ அந்த அக்னியே அவன் தேகத்தை எரித்து தேவர்களிடம் க்ஷேமமாக அவனை சேர்ப்பிக்கும். சிதையில் வைத்த பின் அந்த அக்னியை கொண்டு தான் அவன் பிரேதத்துக்கு - மிருத சரீரத்துக்கு - எரியூட்ட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கான வழிமுறைகள் விரிவாக உண்டு. கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி அல்லது அக்னியை விட்ட சன்யாசி உடல் விட்ட போது எந்த அக்னியால் அவனை எரிப்பது? அதனால் தான் அவர்களை மண்ணில் புதைப்பது.

அக்னி கார்யம் இல்லாத பிற மதஸ்தர்களும் சரீரத்தினை புதைக்கிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டும். ஆக, உடலை எரிப்பது என்பது வேத பரமான ஒன்று. இதனை நினைவில் கொண்டு நாம் செயல் பட வேண்டும்.
ஸ்ரீ மகா பெரியவா பாதங்களே துணை
No comments:
Post a Comment