எத்துணைதான் அன்புசெய்து நட்டாலும் கீழ்மக்கள்
கிட்டுபொருள் தாம்கொண்டு கைவிடுவர் - தொல்லுலகில்
அட்டபாலும் அம்பாகும் வேர்பெய்து வளர்த்திடினும்
எட்டிமரம் காய்க்காது மா!
(Bhuvaneshwar D)
பொருள்:
எத்துணை தான் நாம் அன்பு செய்து நட்பு பாராட்டி இருந்தாலும், கீழ்மக்கள் நம்மிடம் கிடைக்கும் பொருளை சுருட்டிக்கொண்டு, சமயம் நேர்ந்த போழ்து நமக்கு உதவாமல் கைவிடுவர். தொன்மையான இந்த உலகில், சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய பாகும் (அம்பாகும் = அம + பாகும் = இனிய பாகும்) எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது (கசப்பும் விடமும் உள்ள எட்டிக்காயை தான் தரும்)
1 comment:
//சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது////
நல்ல உதாரணம் , "பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று நம் முன்னோர் சொன்னது மிக்க சரி.
Post a Comment