"கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல" - இரு கைகளும் அற்ற ஒரு ஊமை. அவனிடம், ஒரு பாறை மீது வெண்ணைக்கட்டியை வைத்து "இதனை காத்து வா" என ஒருவர் ஒப்படைத்து செல்கிறார்.
வெயில் ஏறுகிறது, பாறை சூடாகி, அந்த வெண்ணை உருகத்துவங்குகிறது. அருகில் யாரும் இல்லை. ஊமையாதலால் யாரையும் உதவிக்கு அழைக்கவும் இயலாமல், வெண்ணையை காப்பாற்ற கைகளும் இல்லாத அந்த கையற்ற ஊமை தவிப்பதை போல, அடியே தோழி நானும் காதல் எனும் நோயினால் அல்லற்படுகிறேன். என் உள்ளம் கவர்ந்த அவரிடம் சொல்லவும் இயலவில்லை, இந்த பாழாய்ப்போன வெட்கம் தடுக்கிறதே! அவரும் ஒரு அசடு போல, தானாக புரியவில்லை. நான் என்னடி செய்வேன்?
++++++++++
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஒரு ஆண் மகன் தன் தோழனிடம் தன் காதலின் கையறு நிலையை விவரிக்கும் வரிகள் தான் "கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல" . இது ஒரு பெண் சொல்லுவது போல இருந்தால் பொருத்தமாக இருக்கும் என தோன்றியதால் நான் இதனை பெண்பாலில் எழுதினேன்.
No comments:
Post a Comment