சிற்றிடம் சேர சீரறும் - வாதில்
சிற்றிடம் பொருதார் சிறுசுரை விதைபோல்
பற்களும் நற்கையில் உற்றிடல் ஆதலின்
சேர்தலும் பொருதலும் சிற்றிடம் தவிர்மின்!
உரை:
சிறந்த புகழுடைய மக்களே! இதை கேளுங்கள். உறவென மகிழ்ந்து சேர்வதற்கும், வாதப்போரில் மோதுவதற்கும் சிறுமதி படைத்த மூடர்களை தவிர்த்து விடுங்கள்;
சிறியோரிடம் நெருங்கி உறவாடுவதால் உனது புகழாகிய சீர் அறும் (அற்று அழிந்து போகும்);
சிறுமதி படைத்த கல்லாத, அடக்கமில்லாத புல்லனுடன் வாதப்போர் புரிவீராயின், சுரையினது வெள்ளிய விதைகள் போல உமது பற்கள் உமது கைகளில் வீழக் காண்பீர் (மூடனான அவன், வாதம் புரியும் மதி அற்றமையால், தனது கைவன்மையால் அடித்து துன்பம் தருவான்).
ஆதலால் கல்வி எனும் அழகு படைத்த மக்களே, உறவென மகிழ்ந்து சேர்வதற்கும், வாதப்போரில் மோதுவதற்கும் சிறுமதி படைத்த மூடர்களை தவிர்த்து விடுங்கள்...
No comments:
Post a Comment