Disable text selection

May 29, 2012

Irresponsibility and obscenity!

இன்று பெண் பிள்ளைகளைப்பெற்றவர்களின் பொறுப்பில்லாத போக்கால் தான் பல குடும்பங்கள் சீரழிகின்றன.

பெண்களை மதிக்க வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்கு அம்மாக்காரி சொல்லித்தர வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே போல ஆண்களையும், குறிப்பாக கணவனையும் அவன் வீட்டாரையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டியது பெண்களின் பெற்றோரின் கடமை ஆகும்.

முன்னதை எதிர்பார்க்கும் அவர்கள் பின்னதை செய்வதில்லை பெரும்பாலும்.

பெண்ணுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டு, ஒரு வீட்டு வேலையும் செய்ய தெரியாமல் படிக்க வைத்து விடுவது. முப்பது வயது வரையில் வேலைக்கு போக விட்டு விடுவது. அந்த சுதந்திரத்தையும் சுய சம்பளத்தையும் பார்த்த பெண்ணுக்கு யாரையும் மதிக்க வேண்டும் என்ற நினைப்பு இருப்பதில்லை. அவனுக்கு நான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டேன் என்ற அகங்காரமும் ஆங்காரமுமே இருக்கிறது. யாரையும் "எவனையும்" சார்ந்து நானில்லை என்ற வீராப்பு..... இல்லாத ஆணாதிக்கத்தை இருப்பதாக நினைத்து நம்பிக்கொண்டு எதற்கெடுத்தாலும் நீயா நானா போட்டி போடுவது இத்தகைய பெண்கள் தான் என்பது கண்கூடு. சண்டையின் பொழுது ஆண்கள் வாய் மூடி போய் விடுவது பலவீனத்தால் அல்ல. இதை வளர்த்தால் குடும்பம் இரண்டாகி விடுமே என்ற அக்கறையால் சகித்துக்கொண்டு போகிறார்கள். அவ்வளவே.

இயற்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமைகளை வகுத்துக்கொடுத்து இருக்கிறது. அதன் படி இருக்காமல் ஏதோ சமத்துவம் சரிசமம் என்று கூப்பாடு போடுவது சிறு பிள்ளைத்தனமான வேடிக்கை. பெண்களை கேட்கிறேன், என்று உங்களுக்கு சமத்துவம் இல்லாமல் போனது என்று தான் புரியவில்லை. ஆண் வெளியே சென்று பொருள் ஈட்டினால் நீங்கள் வீட்டில் அத்தனையையும் செய்கிறீர்கள். பாதி வேலை நீங்கள் பண்ணும் போது, நீங்கள் இல்லாமல் வீடு ஓடாது என்கிற போது அது சமத்துவம் தானே?

ஏதோ சில ஆண்கள் மதிக்கவில்லை என்றால் உங்கள் பங்கை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டுமே தவிர சரிசமன் என்று உங்கள் கடமையை உதறி விட்டு தோள் மேல் பையை போட்டு கொண்டு நானும் வேலைக்கு போவேண்டா உன்னை விட சம்பாதிப்பேன் என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கலாம். குடும்பத்துக்கு ஆகாது.

பெண்ணுரிமை கூச்சல் போட தெரு சரியான இடம். குடும்பம் அல்ல.
அது ஆணும் பெண்ணும் தெரிந்தே அன்பினால் கட்டுண்டு இருக்கும் கூடு. சிறை அல்ல. கூடு வேறு சிறை வேறு.

பெண்ணைப்பெற்றவர்கள் சமூக அக்கறை இல்லாமல் பெண்களையும் ஆண் பிள்ளைகளை போலவே வளர்ப்பதால் ஒரு குடும்ப வாழ்வுக்கு உரிய மன நிலையையும், வீட்டு வேலைகள் எதையுமே பண்ணத்தெரியாத பெண்களாகவும் வளர்கிறார்கள் என்பது நிதர்சனம். கலியாணம் ஆன பின்னால் இதனால் பிரச்சினை வெடிக்கும் போது மாப்பிள்ளையை மட்டும் குறை சொல்வது. பெண்ணை பெண்ணாக வளர்க்காததால் வந்த வினை.

அதிலும் இந்த பெண் வீட்டார், சிறுவயது முதலே ஏதோ மாப்பிள்ளை வீட்டார் பேய் கணங்கள் போலவும் இந்த பெண் எப்படி அங்கே போய் இருப்பாளோ என்ற கவலை இருப்பது போலவும் தங்கள் மாமியாரோடு தாங்கள் போட்ட சண்டைகளை இந்த பிஞ்சு பெண்ணிடம் சொல்லுவது........ "சாமர்த்தியமா நடந்துக்கோடி", "புருஷனை உன் கட்டுப்பாட்டில் வச்சிக்கணும்", "எந்த முடிவையும் ஆரம்பத்தில் இருந்தே நீ எடு"...... என்ன கேவலமான புத்தி? அதிலும் சிலர் ஆபாசமாக "தலையணை மந்திரம், சொக்கு பொடி" எல்லாம் போட சொல்லுவார்கள்........ முந்தானையில் முடிந்து கொள்ள சொல்லுவார்கள்.......

ஆண் மகன் என்ன பந்தய பந்தா? மாமியார் மருமகளிடம் இருந்தும் மருமகள் மாமியார்டம் இருந்தும் உரிமை போராட்டம் நடத்தி பறித்து விளையாட? ஏன் அவன் ஒரே சமயம் மகனாகவும் கணவனாகவும் கடமையோடு இருக்க முடியாதா? இருக்க கூடாதா?


No comments: