எத்தனை ஜீவன்கள் இந்த பரந்த நிலவுலகில்? அத்தனைக்கும் அம்மாவாக இருப்பது அந்த பரதேவதை. நமக்காக அம்மாவான ஜகன்மாதா தேர்ந்து கொடுத்த ஜீவன் இந்த மனைவி, கோடியில் ஒருத்தி என்று ஒரு சிறு நினைப்பு கணவனுக்கு வந்து விட்டால், மனைவியை தெய்வம் என்று சொல்லமாட்டானா என்ன?
யாராவது ஒருத்தரிடம் மனஸை அர்ப்பணம் பண்ண வேண்டும். நமக்கென்று வாழாமல் அவருக்காக வாழ்வது நம்மை ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு ஏற்றும். ஈகோவை கரைக்கும். யார் யாருக்காகவோ வாழ்வதை விட உயிரில் பாதியான மனையாளுக்காக வாழ்வதில் தப்பில்லை. தூய துணைவியை ஆராதிப்பதும் நன்றன்றோ?
மனைவியரை மதிக்காத பயல்களுக்கெல்லாம் வெகு சுலபமாக கலியாணம் நடந்து விட்டது போலும். காத்திருந்து, தேடி அலைந்து, நமக்கு கலியாணம் ஆகுமா ஆகாதா என்று ஏங்கி, கோவில் படி ஏறி இறங்கி, வேண்டி பெற்ற மனைவிடம் "காதலி தெய்வம்" என்று நினைப்பது வெகு இயல்பானது அன்றோ? பசித்தவனுக்கு தானே சோற்றின் அருமை தெரியும்?
(இவை அத்தனையும் பெண்களுக்கும் பொருந்தும்).......
No comments:
Post a Comment