இன்று திடீரென்று தோன்றியது, ஒரு ஷாந்தி மந்த்ரம் பற்றி எழுத வேண்டுமென்று.
அது ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் வரும், ப்ருஹதாரண்ய உபநிஷத்திலும் வரும். ஷாந்தி மந்த்ரம்.
ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே|
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே||
என்று வரும்.
இதன் நேரடி அர்த்தம் - அங்கிருப்பதும் பூர்ணம், இங்கிருப்பதும் பூர்ணம், பூர்ணத்தில் இருந்து பூர்ணமான வஸ்துவே உதயமானது........ அப்படி பூர்ணத்தில் இருந்து பூர்ணம் வெளிப்பட்டாலும் எஞ்சியதும் பூர்ணமே.
இதன் பொருள் உட்கருத்து என்னவெனில்,
பரம்பொருள் பௌதிக கணக்குகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று. (கடவுள் இருக்கிறாரா என்று கேட்பவர்களுக்கு இது புரியாது தான்).
சரி. மேலோட்டமாக பார்த்தல் ஏதோ ஏறுக்கு மாறாக உள்ளது போலவே தோன்றும்.
ஆனால் இதை அணுகுவது சுலபம்.
ஒன்றில் இருந்து இன்னொன்றை எடுத்தால், மீதி குறைவாக தானே இருக்க வேண்டும்? அது தானே விதி?
ஆனால் இங்கே என்னடா என்றல் பூரணத்திலிருந்து பூர்ணம் உதயமானதாம், அந்த பூர்ணம் அப்படியே இருந்ததாம். அப்படி என்றால் என்ன அர்த்தம்?
ஒரே வாய்ப்பு தான் இருக்கிறது. ஒன்று அந்த பூர்ணம் பூஜ்யமாக இருக்க வேண்டும். அல்லது அளவற்றதாக இருக்க வேண்டும் (infinity).
சூன்யமாக இருந்தால் சூன்யத்தில் இருந்து எப்படி இன்னொன்று "உதயமாக" முடியும்? முடியாது இல்லையா?
அப்பொழுது அந்த ஆதி பூர்ண வஸ்து infinite வஸ்துவாக தானே இருக்க வேண்டும்?
ஆம்.
அது தான் இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.
எந்த மூல பிரகிருதி ஆதார பிரம்மமாக ஆத்ம ஸ்வரூபமாக இருக்கிறதோ அதே பூர்ண வஸ்து தான், தனது சங்கல்பமாகிய சக்தியினால் இத்தனை ஜகத்தாகவும் வெளிப்படுகிறது.
அதனால் ஜகம் வேறு, பரமாத்மா வேறு அல்ல.
எந்த பரம்பொருள் ஆத்ம ஸ்வரூபமாக அனைத்தையும் வியாபித்து சூக்ஷ்மமாக இருக்கிறாரோ அவரே தான் இந்த ஜகத்தாகவும் இருக்கிறார்......
வாஸ்தவத்தில் பூர்ணத்திலிருந்து எதையும் உருவாக்கவில்லை. அதுவே தான் இதுவாக காட்டிக்கொண்டது. அவ்வளவு தான். அசையாத ஆத்ம ஸ்வரூபம் சிவம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம் அதுதான். அது அசையாது, அழியாது, ஊர் ஊராக போய் உபன்யாசம் பண்ணாது........ நாம் நமஸ்காரம் பண்ணினால் கூட அதற்கு தெரியாது. வேறுபாடற்ற நிலையில் வணங்குபவன் யார் வணங்கப்படுபவன் யார், வணக்கம் தான் எது? மூன்றும் ஒன்று தான்.
இதை தான் நான் எனது கவிதையில் "அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்" என வெளிப்படுத்தியது......
ஏதோ என்னால் இயன்றதை, எனக்கு தெரிந்ததை எழுதினேன்.
No comments:
Post a Comment