Disable text selection

April 30, 2012

நாட்டுப்பெண்/மாட்டுப்பெண்

பேசாமல், ஒழுங்கு மரியாதையாக, மருமகளை, மறுமகள் என்றே சொல்லியிருக்கலாம். (மறுமகள் - வல்லின றுகரம்).ஆனால் நம்மால் அது முடியாதே!!!!

சொல்வதையாவது தெளிவாகப்புரிந்து தான் சொல்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அதற்குத்தான் இந்தப்பதிவு. இந்த வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அலசி அயர்ன் பண்ணி மடித்து அலமாரியில் வைத்துவிடலாம், வாருங்கள்!

நாட்டுப்பெண்/மாட்டுப்பெண் - ஒரு அலசல்:

அப்படியாயின், அதென்ன மாட்டுப்பெண்? சில வீடுகளில் நாட்டுப்பெண் என்பர்.

மாட்டுப்பெண்ணும் இல்லை. நாட்டுப்பெண்ணும் இல்லை...... மாற்றுப்பெண் மற்றும் நாற்றுப்பெண்!

நாற்றுப்பெண் - ஒரு நாற்றங்காலில் இருந்து வயலுக்கு மாற்றி நடப்பட்ட நெல்லின் நாற்று போல, பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வந்து, வாழ்ந்து, வளரும் பெண் - நாற்றுப்பெண். அது தான் மருவி, நாட்டுப்பெண் என்றானது.

மாற்றுப்பெண் - இது கொஞ்சம் சுவாரஸ்யமான, இன்னும் பிரியமான விளிப்பு.

மாற்றுத்துணி என்கிறோம். இருக்கும் துணியோடு சேர்த்து இன்னொரு துணி என்று அர்த்தம் கொள்ளலாம் இல்லையா? போல, மகள் உள்ள வீட்டில் மருமகள், இருக்கும் மகளோடு சேர்த்து இன்னொரு மகள் என்று ஆகும்......

இதுக்கு அதுதான் மாற்று என்கிறோம்..... மாற்று வழி என்கிறோம்....... alternative என்ற அர்த்தத்தில்...... அது, மகள் இல்லாத வீட்டில் மருமகள் 'மாற்று'ப்பெண்...... பெண் இல்லாத குறைக்கு மாற்றாக வந்த 'மாற்று'-பெண்......

அதனால் தானே மாமியாரை அத்தை என்று அழைக்காமல் அம்மா என்று பெண்கள் அழைப்பது....

இந்த மாற்றுப்பெண் தான் மருவி மாட்டுப்பெண் ஆனது.

ஒரு வேளை, புகுந்த வீட்டில் மாடு போல உழைக்க வேண்டி வருவதால் மாட்டுப்பெண் என்றாலும் ஹாஸ்யமாக ரசிக்கலாம். ஆனால் அதன் சோகத்தை, அங்கீகாரம் கிடைக்காத வலியை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.......

April 28, 2012

வேண்டும்!!!

பொன்மாளிகை வேண்டும், அங்கு
வெண்மதி சூழ்ந்திடும் வேளையிலே ஒரு
தண்ணிழல் முற்றமும் தென்றலுடன் என்
பண்ணிசை யாழ்மிசை பண்ணிடவே ஒரு
கன்னியவள் வேண்டும்;

கண்ணுக் கழ கழகாய், ஒரு
கன்றுடன் கறவைபுல் மென்றிட வேண்டும்
அன்றைய சோறுநிதம் மிம் மண்ணில்
சென்று தேடாமல் ஒன்றிட வேண்டும்
குன்றா மதி வேண்டும்;

கற்றவர் உடன்வேண்டும், மற்று
செற்றவள் சொந்தமும் வாணியுடன் நற்
கொற்றவை கூட்டணியும் - சற்று
பெற்று மகிழ்ந்திட அருள் வேண்டும்
நற்றவ மிக வேண்டும்;

எத்தனை இடர் வரினும் - அவை
அத்தனையும் யான் சுட்டிடவே - நல்
புத்தி உடன் வேண்டும்; என்னைக்
கட்டியணைத்திடு மன்னை நிகர்த் தொரு
பத்தினிப் பெண் வேண்டும்......

தாடி

நான் ஏன் தாடி வளர்க்கிறேன்? நீ இதழ் பதித்து முத்தமிடும் வரை என் கன்னங்களை பாதுகாக்க! .......................................................................................................................................................... செல்ல மகளே, சீக்கிரம் பிறந்து வா :)