Disable text selection

May 11, 2014

பிராணநாதன் - பகுதி 4: அம்மா சொன்னது......

"டீ, லஷ்மி, ரொம்பத்தான் ஈகோ உனக்கு. என்ன நீ? என்னை என்ன ஒன்னும் தெரியாதவன்ன்னு நெனச்சாயோ? ஏதோ உன் உதவி இல்லாட்டா என்னோடு வேஷ்டி இடுப்பிலே நிக்காது போலவும், ஊரு மண்ணெல்லாம் தூர்ந்து என்னோடு கண்ணிலே விழுந்தூடும் போலவும்ன்னா ஓவரா காட்டாறாய்? ஓ? என்னோடு அம்மை என்னை சமர்த்தனாவாக்கும் வளர்த்தியிருக்கா. நான் ஒண்ணும் உன்னைப்போல பட்டிக்காடல்லா....... ஒரு ஃபோரின் ரிடர்ன்டாக்கும் தெரியுமோல்லியோ? சரி, கழிஞ்சது கழியட்டும், இனியாவது பாத்து பதவிசா பதிநாதன் மனம் கோணாமல் நடந்துக்கோ. என்னோடு பெருமைகளை என்னோடு அம்மை அன்னைக்கே சொல்லலையா?"  

"சொன்னா."

"சொல்லியுமா? துஷ்டை... மாமியார் பேச்சை மதிக்காத அஹங்காரி...."

"க்ஷமிக்கணும். நான் அவா பேச்சை தட்டினதே இல்லை"

"என்ன சொல்லறாய்?"

"ஆமாம். கேட்டுக்குங்கோ. நமக்கு கலியாணம் ஆன நாள், என்னை தனியா அழைசிண்டு போயி 'என் புள்ளையாண்டானை உன் கைல ஒப்படைக்கறேன். அவனுக்கு நன்னா வாய்நிறைய பேசத் தெரியும். ஏதோ கவிதை பினாத்துவான். மத்தபடி லௌகிக சாமர்த்தியம் போறாதுடீம்மா. இத்தற நாள் நான் பொத்தி பொத்தி பாத்துண்டேன். நீ தான் இனி அவனை சகலத்திலும் சம்ரக்ஷிக்கணும் கோந்தை....'ன்னு சொன்னா. அந்த வார்த்தையை இன்னைக்கு வரைக்கும் நாப்பது வருஷமா தட்டாமல் நடந்துக்கறேன். நான் அஹங்காரி தான்." 

"................"

(புவனேஷ்வர்)