குன்றின்மீ தகலேற்றி வைத்தா லங்கு
சென்றிடும் யாவர்க்கு மொளிகாட்டு மன்றோ;
அன்பெனும் குன்றேறி நின்றுவிட் டாரவர்
கண்களில் பண்புசெய் பேதங்க ளுண்டோ?
உரை:
உயர்ந்து பலரும் காணுமாறு விளங்கும் பெருமை பொருந்திய குன்றின் முகட்டில் அன்பு பொருந்திய அறிஞர் ஒரு பெரும் அகல் விளக்கினை ஏற்றுவாராயின், ஒளி பொருந்திய அழகிய அவ்விளக்கு, காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும் இயல்பினை உடைய அந்த காட்டு வழியே செல்லும் மாந்தர்க்கு ஒளியினை நல்கும்.
இவன் நல்லவன், இவன் பொல்லான் என்று வேறுபாடு பார்த்தா அவ்விளக்கு சிறந்த ஒளியினை வழங்கும்? யாவர்க்கும் அன்றோ?
அங்ஙனம், தம் நெஞ்சகத்தே அன்பெனும் அமுதத்தை கொண்ட பண்புடைய கற்றவர், அவ்வன்பினை பேதம் பார்க்காது அனைவர்க்கும் அளித்து தாமும் இனிது மகிழ்ந்திருப்பர்.
May 24, 2012
May 23, 2012
அன்னையினருள்
ஸ்ரீ காமாக்ஷி துணை:
மயங்கிய நிலை:
தீதிது செய்ய நலமிதென் றறியோம்
மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;
சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்
செய்யா தன செய்வோம்;
உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்
பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே
செய்யா தனபல செய்துழி வீழ்வோம்
மெய்யா னதுகா ணோம்.
அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்
கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்
உண்டான் உலகம் உலகே ழானான்
உண்மை யதை யுணரோம்;
உய்த நிலை:
போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை
பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;
தாயெனக் கொண்டுவிட் டோம் - பெற்ற
சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!
உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை
கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;
வேறென்ற நிலை களைவா ளொருமாயத்
திரை கிழித்தேகிடக் கரந் தருவாள் .
May 21, 2012
ரொம்ப-நல்ல-ஜாதகம்?
என்ன தான் ஜாதகம், கிரகம் என்று நாம் அலசினாலும், ஜாதகம் என்பது ஒருத்தருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தோராயமாக தான் சொல்ல முடியும். எப்படி என விளக்குகிறேன், நான் நினைப்பதை.
ஒருத்தருக்கு ரொம்ப நல்ல ஜாதகம் என்று வைத்துக்கொள்வோம் இன்னொருத்தருக்கு அவ்வளவாக சுகமில்லை ஜாதகம். நாம் ஒத்து பார்ப்பதில் சரியாக இருக்க வேண்டும் அல்லவா, அதனால் என்ன பண்ணலாம், முன்னவருக்கு எந்த எந்த வீடுகள் அம்சமாக உள்ளவோ, அவை எல்லாம் பின்னவருக்கு அவ்வளவாக சுகமில்லை. (ஏன் சொல்கிறேன் எனில், அவருக்கு சுகமில்லாத சில இவருக்கு ஜாம் ஜாம் என்று இருக்கலாமே.... அதனால்);
தொழில் ஸ்தானம் என்றே வைத்துக்கொள்வோம், ஒரு பேச்சுக்கு. முன்னவருக்கு நல்ல அமைப்புகள். பின்னவருக்கு கொஞ்சம் முடக்கமான அமைப்பு.
ஆனாலும், முன்னவர் வெற்றி பெற கடும் உழைப்பும், தெய்வ பக்தியும் இருந்தாக வேண்டும். இல்லை என்றால் அவர் ஜாதகம் அவரை இலவசமாக எல்லாம் உச்சாணியில் வைக்காது. அப்படியே வைத்தாலும் சமயத்தில் (சரியில்லாத தசா புக்திகளில்) கீழே விழுந்து அடிபடுவார்.
பின்னவர் கடுமையாக உழைத்தார் என்றால், எல்லாவற்றையும் மீறி வெல்வார், முன்னேறுவார்.
இந்த மருந்தை அய்யன் வள்ளுவன் சொன்னாரே
"தெய்வத்தா னாகாது எனினு முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்"
A good horoscope is like the combination of good pitch, weak opposition bowling attack, home ground advantage and good form of the batsman in question. These make it easy for him to score a century. But still he has to play with sense and judgement otherwise he will get out at any point of time.
A not so good horoscope is like a green seaming track, formidable opposition bowling attack, foreign conditions and not so good form of the batsman in question. these make it difficult for him to score a century. But still, if he plays with the best of effort he can, cautiously and with determination, he can still score a century.
And what more, this fighting century amidst challenges will be remembered and admired by people more than the relatively easier century in easy conditions.
So, let's face life as a challenge and never give up. If we are righteous, God will be by our side. He will reduce the disasters that have to come to us due to horoscope. For instance what should have been death would be a small accident.
Let's live righteously and happily!

May 20, 2012
காதலி தெய்வம்: An explanation!
என்னுடைய களிப்பில் கவிதை என்ற பதிவில் காதலி தெய்வம் என எழுதி இருந்தேன். பலர் அதற்கு பாராட்டுக்களை தந்தனர். சிலர் புருவம் உயர்த்தினர். அதற்கான ஒரு தன்னிலை விளக்கம், இதோ!
எத்தனை ஜீவன்கள் இந்த பரந்த நிலவுலகில்? அத்தனைக்கும் அம்மாவாக இருப்பது அந்த பரதேவதை. நமக்காக அம்மாவான ஜகன்மாதா தேர்ந்து கொடுத்த ஜீவன் இந்த மனைவி, கோடியில் ஒருத்தி என்று ஒரு சிறு நினைப்பு கணவனுக்கு வந்து விட்டால், மனைவியை தெய்வம் என்று சொல்லமாட்டானா என்ன?
யாராவது ஒருத்தரிடம் மனஸை அர்ப்பணம் பண்ண வேண்டும். நமக்கென்று வாழாமல் அவருக்காக வாழ்வது நம்மை ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு ஏற்றும். ஈகோவை கரைக்கும். யார் யாருக்காகவோ வாழ்வதை விட உயிரில் பாதியான மனையாளுக்காக வாழ்வதில் தப்பில்லை. தூய துணைவியை ஆராதிப்பதும் நன்றன்றோ?
மனைவியரை மதிக்காத பயல்களுக்கெல்லாம் வெகு சுலபமாக கலியாணம் நடந்து விட்டது போலும். காத்திருந்து, தேடி அலைந்து, நமக்கு கலியாணம் ஆகுமா ஆகாதா என்று ஏங்கி, கோவில் படி ஏறி இறங்கி, வேண்டி பெற்ற மனைவிடம் "காதலி தெய்வம்" என்று நினைப்பது வெகு இயல்பானது அன்றோ? பசித்தவனுக்கு தானே சோற்றின் அருமை தெரியும்?
(இவை அத்தனையும் பெண்களுக்கும் பொருந்தும்).......
April 30, 2012
நாட்டுப்பெண்/மாட்டுப்பெண்
பேசாமல், ஒழுங்கு மரியாதையாக, மருமகளை, மறுமகள் என்றே சொல்லியிருக்கலாம். (மறுமகள் - வல்லின றுகரம்).ஆனால் நம்மால் அது முடியாதே!!!!
சொல்வதையாவது தெளிவாகப்புரிந்து தான் சொல்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அதற்குத்தான் இந்தப்பதிவு. இந்த வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அலசி அயர்ன் பண்ணி மடித்து அலமாரியில் வைத்துவிடலாம், வாருங்கள்!
நாட்டுப்பெண்/மாட்டுப்பெண் - ஒரு அலசல்:
அப்படியாயின், அதென்ன மாட்டுப்பெண்? சில வீடுகளில் நாட்டுப்பெண் என்பர்.
மாட்டுப்பெண்ணும் இல்லை. நாட்டுப்பெண்ணும் இல்லை...... மாற்றுப்பெண் மற்றும் நாற்றுப்பெண்!
நாற்றுப்பெண் - ஒரு நாற்றங்காலில் இருந்து வயலுக்கு மாற்றி நடப்பட்ட நெல்லின் நாற்று போல, பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வந்து, வாழ்ந்து, வளரும் பெண் - நாற்றுப்பெண். அது தான் மருவி, நாட்டுப்பெண் என்றானது.
மாற்றுப்பெண் - இது கொஞ்சம் சுவாரஸ்யமான, இன்னும் பிரியமான விளிப்பு.
மாற்றுத்துணி என்கிறோம். இருக்கும் துணியோடு சேர்த்து இன்னொரு துணி என்று அர்த்தம் கொள்ளலாம் இல்லையா? போல, மகள் உள்ள வீட்டில் மருமகள், இருக்கும் மகளோடு சேர்த்து இன்னொரு மகள் என்று ஆகும்......
இதுக்கு அதுதான் மாற்று என்கிறோம்..... மாற்று வழி என்கிறோம்....... alternative என்ற அர்த்தத்தில்...... அது, மகள் இல்லாத வீட்டில் மருமகள் 'மாற்று'ப்பெண்...... பெண் இல்லாத குறைக்கு மாற்றாக வந்த 'மாற்று'-பெண்......
அதனால் தானே மாமியாரை அத்தை என்று அழைக்காமல் அம்மா என்று பெண்கள் அழைப்பது....
இந்த மாற்றுப்பெண் தான் மருவி மாட்டுப்பெண் ஆனது.
ஒரு வேளை, புகுந்த வீட்டில் மாடு போல உழைக்க வேண்டி வருவதால் மாட்டுப்பெண் என்றாலும் ஹாஸ்யமாக ரசிக்கலாம். ஆனால் அதன் சோகத்தை, அங்கீகாரம் கிடைக்காத வலியை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.......

April 28, 2012
வேண்டும்!!!
பொன்மாளிகை வேண்டும், அங்கு
வெண்மதி சூழ்ந்திடும் வேளையிலே ஒரு
தண்ணிழல் முற்றமும் தென்றலுடன் என்
பண்ணிசை யாழ்மிசை பண்ணிடவே ஒரு
கன்னியவள் வேண்டும்;
கண்ணுக் கழ கழகாய், ஒரு
கன்றுடன் கறவைபுல் மென்றிட வேண்டும்
அன்றைய சோறுநிதம் மிம் மண்ணில்
சென்று தேடாமல் ஒன்றிட வேண்டும்
குன்றா மதி வேண்டும்;
கற்றவர் உடன்வேண்டும், மற்று
செற்றவள் சொந்தமும் வாணியுடன் நற்
கொற்றவை கூட்டணியும் - சற்று
பெற்று மகிழ்ந்திட அருள் வேண்டும்
நற்றவ மிக வேண்டும்;
எத்தனை இடர் வரினும் - அவை
அத்தனையும் யான் சுட்டிடவே - நல்
புத்தி உடன் வேண்டும்; என்னைக்
கட்டியணைத்திடு மன்னை நிகர்த் தொரு
பத்தினிப் பெண் வேண்டும்......
வெண்மதி சூழ்ந்திடும் வேளையிலே ஒரு
தண்ணிழல் முற்றமும் தென்றலுடன் என்
பண்ணிசை யாழ்மிசை பண்ணிடவே ஒரு
கன்னியவள் வேண்டும்;
கண்ணுக் கழ கழகாய், ஒரு
கன்றுடன் கறவைபுல் மென்றிட வேண்டும்
அன்றைய சோறுநிதம் மிம் மண்ணில்
சென்று தேடாமல் ஒன்றிட வேண்டும்
குன்றா மதி வேண்டும்;
கற்றவர் உடன்வேண்டும், மற்று
செற்றவள் சொந்தமும் வாணியுடன் நற்
கொற்றவை கூட்டணியும் - சற்று
பெற்று மகிழ்ந்திட அருள் வேண்டும்
நற்றவ மிக வேண்டும்;
எத்தனை இடர் வரினும் - அவை
அத்தனையும் யான் சுட்டிடவே - நல்
புத்தி உடன் வேண்டும்; என்னைக்
கட்டியணைத்திடு மன்னை நிகர்த் தொரு
பத்தினிப் பெண் வேண்டும்......
தாடி
நான் ஏன் தாடி வளர்க்கிறேன்? நீ இதழ் பதித்து முத்தமிடும் வரை என் கன்னங்களை பாதுகாக்க! .......................................................................................................................................................... செல்ல மகளே, சீக்கிரம் பிறந்து வா :)
Subscribe to:
Posts (Atom)