Disable text selection

January 22, 2012

The meaning of this proverb: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

I was pondering about the meaning of this proverb: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. 

On the surface, it appears as if it emphasizes implicit obedience to the words of the father.

But, when we think deeper, could it mean that way actually? What if the father was a bad man and asked his son to steal from the next door? Is his word still the holy word? Can’t be, can it?

So, what could this age old proverb mean? I asked Ambaal.

And she gave a beautiful reply. I am privileged to share this with you all.

இதை விட சிறந்த மந்திரமில்லை என்றால் அந்த மந்திரம் எது? ஒரு மந்திரத்தை தவிர எல்லா மந்திரத்தையும் விட்டுவிட வேண்டும் என்று ஒரு நிலை வருமாயின் எந்த மந்திரத்தை மட்டும் வைத்துக்கொள்வாயோ அந்த மந்திரமே தலை சிறந்த மந்திரம், இல்லையா? அம்மந்திரத்தை விட சிறந்த மந்திரமில்லை.

வேத அத்யயனம் செய்யாமல் விட்டவன் கூட, காயத்ரி மந்திரம் ஜபித்து உய்யலாம் என்று உள்ளது. மூன்று தலைமுறையாக வேத அத்யயனம் விட்டவனுக்கு கூட துர் பிராம்மணன் என்று தான் பெயர். அவன் கெட்டுப்போன பிராம்மணன். பிராயச்சித்தம் செய்துகொள்ள வழியுண்டு.

ஆனால் மூன்று தலைமுறையாக காயத்ரியை விட்டவன் பிரம்மபந்து. பிராம்மணர்களை உறவாக உடையவன் அவ்வளவே.

ஆகையால், பிராம்மணனை பிராமண தன்மையை இழக்க செய்வது, காயத்ரியை விடும் செயல். அது தலையாய மந்த்ரம்.

அந்த மந்திரத்தை ஒரு குழந்தை எங்ஙனம் பெறுகிறான்? உபநயனத்தின் போது, தகப்பனார் உபதேசித்து - தந்தை சொல் வழியாக - பெறுகிறான்.

ஆக, காயத்ரி மந்திரம் தான் தந்தை சொல் என்று மறைத்து வைத்து குறிக்கப்பெற்றது. (வேத மாதா காயத்ரி - வேதத்துக்கு மற்றொரு பெயர் மறை - ஆகையால், காயத்ரி மறைத்து குறிப்பாக உணர்த்தப்பட்டது தகுமே அன்றோ).

(ஆக, காயத்ரி மந்திரமான) தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

 

No comments: