Disable text selection

October 29, 2012

அழகிய சொல்லாட்சி!

ஒரு சஞ்சிகை அல்லது நூலின் வெளியீடு எனும் பொருளில் நம் தமிழில் "இதழ்" என்னும் அழகிய பதத்தை கையாளுகிறோம். வடமொழியில் இல்லாத ஒரு சொல்லாட்சி அழகு இது என்றால் நம் தமிழ் அன்பர்களுக்கு இன்னும் குஷி அல்லவா?. அப்படி ஒன்று இது. தமிழுக்கே உரித்தான ஒரு அழகிய மொழியாட்சி.
பெண்ணின் அழகிய உதடுகளுக்கும் இதழ் என்றே பெயர். மலரின் இதழ்கள் நாம் அறியாததல்ல. மலரின் மணத்தை, எல்லா இதழ்களும் விரிந்த பின்னரே நாம் முழுதாக துய்க்க இயலும். காதலியின் உள்ளத்தை, அவள் மனம் உவந்து  இதழ் திறந்து சொன்னால் ஒழிய எந்த கொம்பனாலும் முழுதாக கண்டுபிடிக்க இயலாது!
அதே போல வெளியில் பார்த்தால் தெரியாத, படித்தால் மட்டுமே புரியும் தன்மை உடைய அறிவார்ந்த, சுவை மிக்க, பயனுள்ள சான்றோர் தந்த செய்திகளை தனக்குள் அடக்கி உள்ள புஸ்தகத்தின் வெளியீட்டையும் இதழ் என்றே சொல்கிறோம் போலும். 
+++++
பிரியங்களுடன்
புவனேஷ் 

1 comment:

thanusu said...

இதழ் விரிப்புக்கு
இத்தனை
விவரிப்பு!
அதில் மயக்கம் வந்தது
இதழ்"கள்" ருசித்ததாலா?