Disable text selection

August 8, 2012

மருந்து

மகான்களும் யோகிகளும் நம்பி வந்தவர்களை காப்பாற்ற அவர் தம் பிணிகளை த்தாம் ஏற்றுக்கொள்வது இன்றளவும் நம் காணும் உண்மை. ஹீலிங் என்று செய்வது வேறு; இது வேறு;

ஹீலிங்கில் நோயின் வெளிப்புற வெளிப்பாட்டினை அடக்கலாமே ஒழிய கார்மீய காரணத்தினை அதாவது நோய் வரக்காரணமான கர்மாவை ஒழித்துக்கட்ட இயலாது.

ஆனால் மகான்கள் அவ்விதம் அல்ல. கர்மாவையே தாங்கள் ஏற்றுக்கொண்டு கழித்துக்கட்டி விடுவார்கள்.

எல்லா மதத்திலும் இது உண்டு.

இயேசு நாதர் பிறர் பிணிகளை போக்கினார், அவர் தம் பாபங்களை (கர்மாவை) தான் ஏற்று கொண்டார். அவரே ஸ்பஷ்டமாக தெளிவாக இதனை சொல்லியும் இருக்கிறார் - உங்கள் பாபங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று.

சரி. அவர் இறைமகன் மட்டுமல்ல, மகா யோகியும் கூட, என இந்தியாவில் இந்துக்கள் பலர் ஒப்புக்கொள்வது நிஜம்.

மகான்களை காணும் பாக்கியம் இல்லாதவர்கள் என்ன பண்ணலாம்?

தாங்களே ஏதாவது ஒரு இறை வழிபாட்டின் மூலமாகவோ, அல்லது அந்த கர்மாவினை கழிக்க ஒரு தொண்டின் மூலமாகவோ நோயினை போக்க வேண்டியது தான். மருந்துகளும் வைத்தியமும் தற்காலிக நிவாரணமே.

அப்படி விழைவோருக்கு பூம்புகார் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் ஒரு சரணாலயம்.

அங்கு போக முடியாத மக்கள் என்ன பண்ணலாம்?

இந்த நாராயணீய சுலோகத்தினை சொல்லலாம்.


இந்த கீழ்க்கண்ட கட்டுரையை  திரு. மகேஷ்அவர்கள் தனது வலைத்தளத்தினில் பதிவிட்டுள்ளார்.

அதன் இணை பதிவாகவே இப்பதிவு, 

அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே

த்வமித்தம் உத்தாபித பத்மயோனி

அநந்தபூமா மம ரோகராசிம்

நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ

- ஸ்ரீமத் நாராயணீயம்

பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

"நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், "ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.

அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.

நான் இந்த ஸ்லோகத்தை எழுதி, எனக்குத் தெரிந்த யாருக்கேனும் (இப்போதுதான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறதே) புற்றுநோய் என்று தெரிந்தால், அவர்களுக்குக் கொடுத்து, பெரியவா சொன்னதைக் கூறுகிறேன்.


- கலா மூர்த்தி, சென்னை

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)


 +++++

பலருக்கும் பயன் பட வேண்டும், போய் சேர வேண்டும் எனும் விருப்பத்தில் இக்கட்டுரையினை நான் வெளியிட்டுள்ளேன். 


இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு எல்லா நலனும் உண்டாகி, தேக நலனும் மனசாந்தியும் சந்தோஷமும் நிறைந்து வாழ்வாங்கு வாழ இறையருளை வேண்டுகிறேன்.

 

 

2 comments:

Parvathy Ramachandran. said...

Excellent Post. Thank you so much brother.

bdharmal said...

Thanks, akka, My Pleasure! :)